செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருவேலி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன், 33. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், சித்தாமூர் காவல் எல்லைக்குட்பட்ட 14 வயது சிறுமி, பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்தாள். சிறுமியை வீட்டில் விடுவதாக ஏமாற்றி, இருசக்கர வாகனத்தில் கேசவன் அழைத்துச் சென்றுள்ளான். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி, மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, கேசவனை நேற்று கைது செய்தனர்.