மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்க விழா நிகழ்ச்சி சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் பங்கேற்பு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பாலாற்றங்கரையோரம் உள்ள கிராமங்களிலும், திண்டிவனம், ஓங்கூர் உள்ளிட்ட கிராமங்களின் விவசாய நிலங்களில் 1.26 லட்சம் டன் கரும்புகள் விவசாயம் செய்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் இந்த ஆண்டு மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை சீசன் இன்று (டிசம்பர் 25) தொடங்கப்பட்டது. அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அவர்கள் கலந்துகொண்டு கரும்பு அரவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராஜ், காஞ்சிபுரம் எம்பி ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், ஒன்றிய செயலாளர் சத்யசாய், இதயவர்மன், பொன்சிவகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.