காஞ்சியில் சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

0பார்த்தது
காஞ்சியில் சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர், கோடை விடுமுறையில் தையல் பயிற்சிக்கு சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின், காதலிப்பதாக கூறி, மொபைல் போனில் சிறுமியிடம் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார். சிறுமியை கண்டித்து, மொபைல் போன் எண்ணை போலீசார் மாற்றிக் கொடுத்துள்ளனர்.

அதன்பின், 'உன்னை திருமணம் செய்துகொள்கிறேன். வீட்டை விட்டு வெளியே வா; வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்' எனக்கூறி, 2021 ஜனவரி 14ல் சிறுமியை, அவரது அண்ணன் வீட்டிற்கு கடத்திச் சென்றார். அங்கு, நீ தான் என் மனைவி என, சிறுமியை நம்ப வைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து, துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து, விக்னேைஷ கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.

வழக்கில் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால், விக்னேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபரதாமும், கட்டத்தவறினால் ஒராண்டு சிறைதண்டனையும் விதித்து நேற்று, நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 3.50 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி