காஞ்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

64பார்த்தது
காஞ்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாம் பிரகாஷ், 20. ஸ்ரீபெரும்புதூரில் தங்கி, வல்லம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் பணி முடிந்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் இருந்து, தேரடி சாலை வழியே நடந்து சென்ற போது, மர்ம நபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் மற்றும் 3,000 ரூபாயை பறித்துவிட்டு தப்பியோடினார். 

இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், குரோம்பேட்டையைச் சேர்ந்த நரேன்குமார், 19, என்பவரை, நேற்று முன்தினம் சுங்குவார்சத்திரம் அருகே, புதுப்பட்டு கிராமத்தில் கைது செய்தனர். முன்னதாக, போலீசாரை கண்டு தப்பிக்க முயன்ற போது, வழுக்கி விழுந்ததில், நரேன்குமாரின் வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, முதலுதவிக்குப் பின் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி