காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில், காஞ்சி அன்னசத்திரம் இயங்கி வருகிறது. இங்கு காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும் ஆதரவற்றோர், சாலையோரம் வசிப்போருக்க்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அன்னசத்திரம் துவக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, மூன்றாம் ஆண்டு ஆண்டு மகிழ்ச்சி விழா நடந்தது.
இதில், மூன்று ஆண்டுகளாக, 365 நாட்களும் தொடர்ந்து, மூன்று வேளையும் அன்னதானம் வழங்க உறுதுணையாக இருந்து வரும், 28 சேவை அமைப்பினருக்கும், தனி நபர் 19 நபர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில, நன்கொடையாளர்கள், சேவை உள்ளங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர் என, காஞ்சி அன்னசத்திரம் பொறுப்பாளர்கள் தி. மோகன், து. பன்னீர்செல்வன் தெரிவித்தனர்.