"இரும்பேடு பள்ளி மைதானம் புதர் மண்டி சீரழியும் அவலம்

68பார்த்தது
"இரும்பேடு பள்ளி மைதானம் புதர் மண்டி சீரழியும் அவலம்
செய்யூர் அருகே இரும்பேடு கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.

மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக, 3 ஏக்கர் பரப்பளவில், பள்ளி வளாகத்திலேயே மைதானம் உள்ளது. இது தற்போது, பராமரிப்பு இன்றி புதர் மண்டி உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.


இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

இரும்பேடு அரசு பள்ளியில், சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி மைதானம், முறையான பராமரிப்பின்றி புதர் வளர்ந்துள்ளது. இதனால், விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஆர்வத்துடன் விளையாட வரும் பள்ளி மாணவர்கள், விஷ பூச்சிகளை கண்டதும் அச்சத்தில் திரும்பி செல்கின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மைதானத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி