சென்னை புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் அதேபோல புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யப்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு.
அந்த வகையில சென்னை புறநகர் பகுதியான
வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செய்யூர், கல்பாக்கம்
உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வெயில் வழக்கத்திற்கு மாறாக அடித்த நிலையில் தற்போது இருள் சூழ்ந்த மேகம் காணப்பட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக வேலை முடித்து வீட்டுக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் நனைந்தபடி செல்லும் ஒரு சூழல் உருவாக்கியுள்ளது.
இருப்பினும் தொடர்ந்து ஐந்து நாட்களாக இரவில் மழை பெய்வதால் இத்தனை புறநகர் பகுதியில் வெப்பம் தணிந்து குழுசான சுடர் நிலவு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.!!