மதுராந்தகம் அருகே தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

74பார்த்தது
மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் இயக்குனர் முனைவர் மீனாட்சி அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் கற்பக விநாயகா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர். அண்ணாமலை ரகுபதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பெங்களூர் அவேக்க்ஷா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் மாநில அளவில் சிறந்த இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது பட்டமளிப்பு விழாவில் கல்லூரி டீன் முனைவர் சுப்புராஜ், கல்லூரி முதல்வர் முனைவர் காசிநாத பாண்டியன், கல்லூரியின் துணை டீன்கள் முனைவர் கே. சிவகுமார், முனைவர் எஸ். தினேஷ்குமார், எஸ். செந்தில்குமார் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி