செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், காந்தி சாலை சிக்னல் முதல் சானடோரியம் மெப்ஸ் சிக்னல் வரை, ஜி. எஸ். டி. , சாலையின் கிழக்கு பகுதியில், 'ஒர்க் ஷாப்' மற்றும் வாகன உதிரி பாக விற்பனை கடைகள், இரண்டு 'டாஸ்மாக்' கடைகள் இயங்கி வருகின்றன.
இவற்றுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடைகாரர்கள், தங்கள் வாகனங்களை ஜி. எஸ். டி. , சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தி வருகின்றனர். தவிர, நடைபாதையும் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. வரிசைகட்டி நிறுத்தப்படும் வாகனங்களால், 'பீக் ஹவர்' நேரத்தில், தாம்பரம் முதல் மெப்ஸ் சிக்னல் வரை, கடும் நெரிசல் ஏற்படுகிறது; அடிக்கடி விபத்தும் நடக்கிறது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதியடைகின்றனர்.
இது குறித்து தொடர்ந்து புகார் சென்ற நிலையில், தாம்பரம் போக்குவரத்து போலீசார் நேற்று, நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதுபோன்ற போக்குவரத்து காவல்துறை சார்பாக எடுக்கப்படும் நடவடிக்கையால் பொதுமக்களிடம் நல்லவராக பெற்றுள்ளது.