வேளாண் இயந்திரங்களுக்கு கட்டணம்... நிர்ணயம்!

64பார்த்தது
வேளாண் இயந்திரங்களுக்கு கட்டணம்... நிர்ணயம்!
குறைந்த கட்டணத்தில், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு, விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். தனியாரை காட்டிலும், கூட்டுறவு துறையில், குறைந்த வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அத்துறையினர் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், 264 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 56 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்குகின்றன.

இதில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, பயிர் கடன், ஆடு, மாடு பராமரிப்பு கடன், உரங்கள் விற்பனை ஆகிய பணிகள் செய்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி