குன்றத்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

59பார்த்தது
ஒரே நாளில் 57 திருமணங்கள் குன்றத்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல்



குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும் வழக்கம் வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான இன்று ஒரே நாளில் மட்டும் குன்றத்தூர் முருகன் கோவிலில் 57 திருமணங்கள் நடை பெற்று வருகிறது குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், திருமணங்களும் ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளதால் தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது இதனால் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது கோவில் வளாகத்தில் திருமணத்திற்கு வந்தவர்களும், சாமி தரிசனம் செய்ய வந்த மக்களும் அதிக அளவில் வந்திருப்பதால் அந்த பகுதி முழுவதும் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி