செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் செய்யூர் எம்எல்ஏ கலந்துரையாடல் கூட்டம் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் என பலர் கலந்து கொண்டு உள்ளாட்சியில் உள்ள முக்கிய பிரச்சினைகளைக் கோரிக்கையாகச் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு அவர்களிடம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.