அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாண்டியன் வயது 31 என்பவர்
அச்சிறுப்பாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில்
அச்சிறுப்பாக்கம் கூட்டு சாலையில் ஓரமாக ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்தபோது சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி சென்ற கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் கூட்டுச்சாலையில் நிருத்தி வைத்திருந்த ஆட்டோ மீது மோதி
கார் விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்த பாண்டியன் துருக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
மேலும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்து அச்சிறுப்பாக்கம் போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.