அண்டவாக்கம் அண்டபாண்டீஸ்வரர் திருக்கோயில் சங்க அபிஷேக விழா

70பார்த்தது
அண்டவாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அண்டபாண்டீஸ்வரர் திருக்கோயில்
108 சங்க அபிஷேக விழா



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு அண்டபாண்டீஸ்வரர் திருக்கோயில் 3-ஆம் ஆண்டு வருஷப்பூர்த்தி விழாவை முன்னிட்டு
108 சங்க அபிஷேக விழா
வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த 3-ஆம் ஆண்டு வருஷப்பூர்த்தி விழாவை முன்னிட்டு அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு அண்டபாண்டீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்கு வைத்து உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.


இதை அடுத்து பூஜைகள் செய்யப்பட்ட 108 வலம்புரி சங்குகளை வைத்து அண்டபாண்டீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி