மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் வாகன நுழைவு கட்டணம் என்ற பெயரில் அடாவடி வசூல் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி பக்தர்கள் கோரிக்கை--
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் தனிநபர் நிர்வகித்து வருவதாகவும் இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதாகவும் ஆடி மாதம் தருணத்தில் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இக்கோவிலில் நுழைவாயிலுக்கு 500 மீட்டருக்கு முன்பு வாகன நுழைவு சீட்டு என்ற பெயரில் பக்தர்கள் வரும் வாகனங்களை மடக்கி அடாவடி வசூல் செய்வதாகவும் வெளியூரில் இருந்து வரும் வாகனங்களுக்கு ரூ. 50, 100, 200 என்று அடாவடித்தனம் செய்து வசூலிப்பதாக கூறப்படுகின்றது. தற்போது இக்கோவிலின் சுற்றுப்புறங்களில் குப்பை, கழிவுநீர் தேங்கியுள்ளதாகவும் பக்தர்களுக்கு குளியலறை மற்றும் கழிவறை இல்லாததால் அவதிப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இக்கோவிலில் அம்மனை தரிசனம் செய்ய புடவை, பத்திரிக்கை, மொட்டையடிக்க, காதுகுத்தல், அர்ச்சனை, அபிஷேகம் எனும் பெயரில் ஆயிரக்கணக்கில் வசூல் செய்கின்றதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.