தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்- 5ல் நிலவும் சுகாதார சீர்கேடு மற்றும் மக்கள் பணிகளை செய்ய தவறிய தி. மு. க. , அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ. தி. மு. க. , சார்பில், நேற்று காலை கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம். எல். ஏ. , தன்சிங், முன்னாள் அமைச்சர் சின்னையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை குறைக்கப்பட்டதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.