மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். மார்கழி தை மாதங்களில் இருமுடி கட்டி பக்தர்கள் வழக்கமான அளவைவிட கோவிலுக்கு ஏராளமானோர் வருவர். இந்தக் கூட்டநெரிசலை பயன்படுத்தி திருடர்கள் பக்தர்களின் நகைகளை பறிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வண்டிப்பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி நிர்மலா வயது 57 என்பவர் பக்தர்களின் பைகளிலிருந்து பணத்தை திருடியுள்ளார். இதுகுறித்த பக்தர்கள் அளித்த புகாரின்பேரில் மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாவை கைது செய்தனர். பெண் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.