செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாக்கம் ஊராட்சியில் பாக்கம் தாதங்குப்பம் வயலூர் ஆகிய கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒரு ஆண்டில் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும், இதுமட்டுமின்றி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக எங்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கவில்லை எனக் கூறி கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பாக்கம் கிராமத்திற்குச் செல்லக்கூடிய நுழைவு வாயிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.