ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

63பார்த்தது
மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் அதிகப்படியான வாகனம் வருவதால் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில்

கிறிஸ்துமஸ் புத்தாண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என தொடர் ஒரு வார விடுமுறை யோட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு பொதுமக்களின் வாகனங்கள் அதிகப்படியாக படையெடுத்து செல்கின்றன

இதனால் அச்சரப்பாக்கம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன

பொதுமக்களின் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் அளவில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன

வாகன போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சரி செய்து வந்தாலும் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து செல்கின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி