உத்தரமேரூர் வட்டங்களில் பிரபல ரவுடியாக வலம் வந்த திருப்புலிவனம் கிராமத்தைச் சேர்ந்த ருத்ரகுமார், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது உத்தரமேரூர் காவல் நிலையத்தில்- 15-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. உத்தரமேரூர் நீதிமன்றத்தில், நடைபெற்று வரும் குற்ற வழக்குகளுக்கு ருத்ரகுமார் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
உத்தரமேரூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான தனிப்படை போலீசார், பல வாரங்களாக சரித்திர பதிவேடு குற்றவாளியான ருத்ரகுமாரை தேடி வந்த நிலையில், கருவேப்பம்பூண்டி பகுதியில் வாகன தனிக்கையின்போது, ருத்ரகுமாரை உத்தரமேரூர் போலீசார் விரட்டி பிடித்துள்ளனர்.
இவர் மீது பொது மக்களுக்கு பங்கம் விளைவித்தல், குற்றவியல் திருத்தச் சட்டத்தின்-கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார்
உத்தரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் சிறையில் அடைத்தனர்.