பூட்டை உடைத்து நகை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணம் கொள்ளை.

80பார்த்தது
மதுராந்தகம் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணம் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் எஸ். வி. எஸ் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்

இவர் நீர்வளத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அரசு அதிகாரி இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளன இவருடைய மகள் திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்

அவர்களை பார்க்க கடந்த 29ஆம் தேதி லட்சுமணன் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோர் சென்றுள்ளனர்

இதன் பின்பு இன்று வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சித்ரா உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

பீரோவில் இருந்த 150 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சித்ரா மேல்மருவத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடவியில் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வர வைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி