டூ - வீலரிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து வாலிபர் பலி

59பார்த்தது
டூ - வீலரிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து வாலிபர் பலி
படாளம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத், 24. இவர், நேற்று முன்தினம் இரவு, பல்சர் இருசக்கர வாகனத்தில், மெய்யூர் கூட்டு சாலை சந்திப்பில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார்.

மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது, மெய்யூர் அருகே, தனியார் வீட்டு மனை வளைவில், கோபிநாத் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த கோபிநாத், சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து, படாளம் போலீசாருக்கு, அப்பகுதிவாசிகள் தகவல் அளித்தனர்.

அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கோபிநாத்தின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி