செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஓஎம்ஆர் சாலை விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பு எதிரே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடை பாரில் விடிய விடிய கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது இந்நிலையில் இன்று காலை பொதுமக்கள் அவ்வழியாகச் சென்றபோது மதுபான கடையில் இயங்கி வரும் பார்களில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் காலையிலேயே மது பிரியர்கள் மது அருந்தி வருவதை இணையங்களில் வீடியோ பதிவை பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி சென்னை தாம்பரம் மாநகர காவல் ஆணையருக்கு இணைய வழியாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் கள்ளதனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்தனர்.
பின்னர் இது குறித்து மதுவிலக்கு அமலாக்குப் பிரிவு போலீசார் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த பாரை நிரந்தரமாக மூடும் விதமாக அதிரடியாக பார்க்கு சீல் வைத்தனர்.