தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கிழக்கு கடற்கரை சாலை
விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது அப்போது மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பேருந்து நிலையம் அருகே சுரங்க பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது சுரங்க பாதையின் உயரம் 9 அடி வரை வேலை நடைபெற்றது ஆனால் இன்னும் ஒரு மீட்டர் அதாவது 3 அடி உயர்த்தி பணியை செய்ய வேண்டும் என கடம்பாடி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர் இதற்கு மறுப்பு தெரிவித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த அளவில்தான் எங்களால் பணியை மேற்கொள்ளப்படும் என கூறியதாக தெரிகிறது இதனால் பணிகளை நடத்த விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இது குறித்து கடம்பாடி ஊராட்சி மன்றம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுரேஷ்குமார் மற்றும் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கே கே பூபதி ஆகியோர் அப்பகுதி மக்களின் சார்பில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா. செல்வம் சார் ஆட்சியர் நாராயண சர்மா ஆகியோரிடம் சுரங்கப்பாதை உயரத்தை 3 அடி உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை வழங்கினர் அதனை ஏற்று உயரத்தை 3 அடி உயர்த்தி பணி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அமைச்சர் தா மோ அன்பரசன் உள்ளிட்டோர் நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.