காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா கிளக்காடி கிராமத்தில், சித்தேரியில் இருந்து காட்டேரிக்கு செல்லும் ஏரி கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை பயன்படுத்தி, அப்பகுதி விளைநிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு, சிமென்ட் ஓடு வீடு கட்டப்பட்டது.
இதை அகற்ற தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. பின், உத்திரமேரூர் துணை தாசில்தார் சங்கீதா முன்னிலையில், பொக்லைன் வாயிலாக ஆக்கிரமிப்பு வீடு அகற்றப்பட்டது. இதில், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.