சிறுமிக்கு பாலியல் தொல்லை 'போக்சோ'வில் பாதிரியார் கைது

66பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை 'போக்சோ'வில் பாதிரியார் கைது
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சி. எஸ். ஐ. , சர்ச் உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தாய் இறந்து விட்டார். தந்தை, ரயில்வே சாலையில் உள்ள சர்ச்சில் தோட்ட வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம், சி. எஸ். ஐ. , சர்ச் பாதிரியார் தேவஇரக்கம், 54, என்பவரது வீட்டில் சிறுமி தங்க வேண்டியிருந்தது. அன்றிரவு சிறுமிக்கு, பாதிரியார் தேவஇரக்கம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம், சிறுமி வசிக்கும் பகுதியினருக்கு தெரியவந்தது. அதையடுத்து, முதல்வர் தனிப்பிரிவுக்கு, அப்பகுதியினர் மனு அளித்தனர்.

புகார் பற்றி விசாரணை நடத்திய, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திகாவ்யா, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிரியார் தேவஇரக்கம் மீது புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, 'போக்சோ' சட்டத்தின்கீழ், பாதிரியார் தேவஇரக்கத்தை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி