செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெருக்கருணை நடுபழனி
ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி கனகமலை அடிவாரத்தில் இருந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு
ஹோமம் நடத்தப்பட்டு அதன் பின்னர்
பக்தர்கள் பால்குடம் காவடி
ஏந்தியவாறு மலையை வலம்
வந்து படிக்கட்டு வழியாக மலைக்கோயிலை வந்தடைந்தனர்.
அதன் பின்னர் மூலவரான
ஸ்ரீ மரகதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் ஏராளமான
பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.