செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் பழவூர் கிராமத்தில் தளபதி விஜய் பயிலகம் திறப்பு விழா மற்றும் விலையில்லா ரொட்டி பால் முட்டை வழங்கும் விழா கிளைச் செயலாளர் மகாலிங்கம் கிளைத் தலைவர் தட்சணாமூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு தளபதி விஜய் பயிலகத்தை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரொட்டி பால் முட்டை மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிளை துணைத் தலைவர்கள் ரஜினிகாந்த், சிம்பு மகளிர் அணி தலைவி வசந்தி துணைத்தலைவி கலையரசி உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.