பள்ளி பஸ் மோதி முதியவர் பலி

76பார்த்தது
பள்ளி பஸ் மோதி முதியவர் பலி
வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 60. கூலி விவசாயி. இவர் நேற்று, தன் வீட்டில் இருந்து, பசு மற்றும் கன்று குட்டியை மேய்ச்சலுக்காக அப்பகுதி வயலுக்கு ஓட்டிச் சென்றார்.

அப்போது, வாலாஜாபாதில் இயங்கும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து, சுங்குவார்சத்திரம்- - வாலாஜாபாத் சாலையில் வந்து கொண்டிருந்தது. கட்டவாக்கம் அருகே மாட்டை கயிறு கட்டி அழைத்து வந்த ஆறுமுகம், மாடு மிரண்டு ஓடியதால் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

அப்போது, அச்சாலையில் வந்த தனியார் பேருந்து மோதி ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆறுமுகத்தின் மகள் காமாட்சி அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி