அன்னதானம் வேட்டி சேலை வழங்கிய தேசியசெயலாளர் வேலூர் இப்ராகிம்

74பார்த்தது
மதுராந்தகம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பாக அன்னதானம் வேட்டி சேலை வழங்கிய தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம்

மூன்றாவது முறை பிரதமராகும் மோடி தமிழகத்தில் கொண்டாடும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் பகதூர் சேட் ஏற்பாட்டில் அச்சரப்பாக்கம்
பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் உள்ள பறவைகள் முதியோர் இல்லத்தில் தேசிய சிறுபான்மையின செயலாளர் வேலூர் இப்ராஹிம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மதியம் அருஞ்சுவை உணவு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சிறுபான்மையினை செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியது:

சமூக நீதி காவலர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் மூன்றாவது முறையாக ஆட்சி என்பது பாரத மக்களுக்கு மட்டுமல்ல உலக தலைவர்கள் அனைவரும் வரவேற்கக் கூடிய நல்ல தருணமாக இருக்கிறது. நாளைய மறுதினம் பதிவேற்பு விழாவில் அனைத்து மதத்தினரும், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வரவேற்க தயாராக இருக்கிறார்கள். பாரதம் உலகின் குருவாக மாறிக் கொண்டிருக்கிறது.
என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி