இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி.

2776பார்த்தது
இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி.
சோழக்கட்டு கிராமத்தில் குடும்ப பிரச்னை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே சோழக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த முரளி 38 , பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர். அவரது மனைவி ராஜேஸ்வரி 30; இவர்களிடையே நேற்று அதிகாலை குடும்ப தகராறு ஏற்பட்டது. பின் முரளி வழக்கம் போல விவசாய வேலைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து விரக்தியில் ராஜேஸ்வரி வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டு அவரது மகள் ஸ்ரீமதி (9) , மகன் ஷியாம் (8) ஆகியோருக்கு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தை கொடுத்து , தானும் அருந்தி தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார்,

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே மயக்க நிலையில் இருந்த மூவரையும் மீட்டு முதலுதவிக்காக கூவத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனைவரும் தற்போது ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி