செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பஜார் வீதியில் உள்ள மாவட்ட நூலக ஆணைக் குழு கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிளை நூலகத்தினை இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வருகை தந்து திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்பொழுது நூலகத்தில் வருகைப்பதிவு சரியாக உள்ளதா தினசரி பொதுமக்கள் எத்தனை பேர் வந்து செல்கின்றனர், நூலகத்தில் போதிய புத்தகங்கள் உள்ளதா மற்றும் நூலகத்தில் உள்ள கணினிகள் எவ்வாறு செயல்படுகிறது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.