பயிற்சி மைய கட்டிட பணிகளை அமைச்சர் சி. வி. கணேசன் ஆய்வு

1224பார்த்தது
பயிற்சி மைய கட்டிட பணிகளை அமைச்சர் சி. வி. கணேசன் ஆய்வு
செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் கட்டப்படும் நவீன திறன் மேப்பாட்டு பயிற்சி மைய கட்டிட பணிகளை அமைச்சர் சி. வி. கணேசன் ஆய்வு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் படிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய திறன் பயிற்சி பெரும்வகையில் ரூ. 2877 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாட்டில் உள்ள 112 தொழில் பயிற்சி நிலையங்களில் தற்போது 71 தொழல்பயிற்சி நிலையங்களில் தலா ரூ. 34. 73 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெருகிறது, அதன் ஓரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெரும் பணிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ. கணேசன் ஆய்வு செய்தார், அதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் குருப் 1 குருப் 2 இலவச பயிற்சி பெறும் மாணவர்களிடம் கலந்துரையாடினார், மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலகம் சார்பாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணைகளை அமைச்சர் கணேசன் வழங்கினார், வேலை வாய்ப்பு பயிற்சி பள்ளி இயக்குனர் வீரராகவராவ், மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, வனக்குழு தலைவர் திருமலை ஆகியோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். தமிழகத்தில் படித்த, படித்துக்கொண்டு இருக்கின்ற மாணவர்கள் அனைவரும் வேலை வாய்ப்பை பெறுகின்ற வகையில் புதுமையான அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய திறன் பயிற்சி பெறுகிற வகையில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அல்லாத முறையில் வெளிநாடுகளுக்கு இணையாக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 2877 கோடி நிதியொதுக்கி தமிழகத்திலுள்ள 112 தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்பொழுது 71 மையங்களுக்கு 34. 73 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கூடிய திறன் பயிற்சி மையங்களை அமைத்துள்ளதாக அதனை அடுத்த மாதம் இறுதிக்குள் திறப்பதற்கான முயற்சியை முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி மேற்கொண்டுள்ளதாக இதன் மூலம் மாணவர்கள், எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் வரும் நிறுவனங்களில் பணியாற்றும் திறனை அடைவார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி