புதுப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளில் மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதன் ஒரு பகுதியாக புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவரும் முன்னாள் எம்எல்ஏ வுமான எம் தனபால் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டத்துடன் மலர் தூவி மரியாதை செலுத்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் காயத்ரி தனபால் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயரங்கன் மாவட்ட மீனவரணி செயலாளர் கவிஞர் கலியபெருமாள் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.