செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ பத்மாவதி அம்மையார் சமேத ஸ்ரீ சின்னிவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினமான இன்று (ஜனவரி 10) பிரம்மாண்ட மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று எம்பெருமானை தரிசனம் செய்தனர். இதில் அச்சிறுப்பாக்கம் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.