ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த வழக்கறிஞர்களை கைது

52பார்த்தது
மதுராந்தகத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த வழக்கறிஞர்களை கைது செய்த ரயில்வே போலீசார்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பார் அசோசியேஷன் சார்பாக மத்திய அரசு குற்றவியல் சட்டங்கள் பெயரை ஹிந்தி சமஸ்கிருதத்தில் மாற்றியும் சட்டங்களை முழுவதுமாக மாற்றி அமைத்து உருகலைக்கும் வகையில் காலணி ஆதிக்க சட்டமாக பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றி வருகின்ற மேற்படி புதிய குற்றவியல் சட்டங்களில் அமல் ஆக்கத்தை நிறுத்தி வைக்கவும் திரும்ப பெற கோரியும்
மதுராந்தகம் ரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் செய்ய ரயில்வே தண்ட வாளத்தில் ஒன்றிய அரசை கண்டித்து பதாகைகள் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது அங்கிருந்த ரயில்வே போலீசார் மற்றும் மதுராந்தகம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை
ரயில்வே போலீசார் கைது செய்து தனியார் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி