மறைமலைநகரில் கண்காணிப்பு கேமரா பற்றாக்குறை.. குற்றம் அதிகரிப்பு

79பார்த்தது
மறைமலைநகரில் கண்காணிப்பு கேமரா பற்றாக்குறை.. குற்றம் அதிகரிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லையில் மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி உள்ளிட்ட முக்கிய புறநகர் பகுதிகள் மற்றும் கிராமங்கள் உள்ளன. மேலும், மறைமலைநகர் சிப்காட் பகுதியிலுள்ள 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில், புறநகர் பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாடகைக்கு தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த பகுதிகளில் போலீசாரின், 'மூன்றாவது கண்' என அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் இல்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க, கண்காணிப்பு கேமராக்கள் பேருதவியாக உள்ளன. ஆனால், மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெல்ரோசாபுரம், கூடலூர், பேரமனூர், சிங்கபெருமாள்கோவில், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், போதிய அளவில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. பல இடங்களில், பழுதடைந்து உள்ளன என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி