காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசு ஒழிப்பு பணி தீவிரம்

76பார்த்தது
காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசு ஒழிப்பு பணி தீவிரம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, கொசு ஒழிப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்த, தாம்பரம் மாநகராட்சியில் 300 பேர், காட்டாங்கொளத்துார், திருப்போரூர், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், தலா 50 பேர், மற்ற ஊராட்சி ஒன்றியங்களில் தலா 20 பேர் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில், கொசு வளர்வதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டெங்குவை ஏற்படுத்தும் கொசுப் புழுக்கள் நன்னீரில் உருவாகும் என்பதால், வீடுகளில் நன்னீரை தேங்க விடாமல் பார்த்துக்கொள்ளவது குறித்து, வீட்டின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக பராமரிக்க, உள்ளாட்சித் துறை நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக, ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் ஒவ்வொன்றிலும், வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், ஐந்து பேர் கொண்ட தலா இரண்டு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து தகவல் வந்தால், சிறப்பு முகாம் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி