மதுராந்தகம் அருகே புத்தர் சின்னம் கொண்ட மையம் திறப்பு விழா

50பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் பிராண வயலட் ஹீலிங் பன்னாட்டு பயிலரங்கம் இந்தியாவில் முதல்முறையாக ஆறு மீட்டர் அளவிலான போரோ புதூர் புத்தர் சின்னம் இந்தோனேஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு அதன் நிறுவனர் சிவா அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. 

இங்கு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அயல்நாடான இந்தோனேஷியாவில் உள்ள ஜோக் ஜகார்தா என்ற ஊரின் அருகே போரோ புதூர் என்ற புத்தர் நினைவு சின்னத்தின் மாதிரி வடிவம் சுமார் 6 மீட்டர் அளவில் 504 புத்தர் சிலைகள் பொறிக்கப்பட்டு அழகாக காட்சி அளிக்கின்றது சுமார் 7.50 கோடி மதிப்பிட்டில் நிறுவப்பட்டு உள்ளது. 

இந்த புத்தர் பயிற்சி மையத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம் அதற்கு தனிப்பட்ட கட்டணம் எதுவும் கிடையாது. புத்தருடைய போதனைகளையும் அவருடைய கொள்கைகளையும் பின்பற்றுவதுடன் அங்கு வருபவர்களுக்கும் அது போதிக்கப்படுகின்றது. மன்னிப்பு அறிக்கை மற்றும் ஆன்மீக உறுதிமொழி போன்ற முறைகள் மூலமாக இங்கு பிரார்த்தனை நடக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி