காஞ்சி: விடுமுறை எதிரொலி.. படாளம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

68பார்த்தது
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி பொதுமக்கள் செல்ல தொடங்கியிருப்பதால், செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சி வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அதிகப்படியாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை ஆமை வேகத்தில் இயக்கிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி