மதுராந்தக அருகே அரசு பேருந்து விபத்து அதிர்ஷ்டவசமாக 30 பயணிகள் உயிர் தப்பினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சரப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து 30 பயணிகளை ஏற்றிச் சென்ற மதுரைக்கு செல்லும் அரசு பேருந்து தொழுப்பேடு மார்க்கத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து செந்டர் மீடியாவில் விபத்து ஏற்பட்டது. இதில் பயணித்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அச்சரப்பாக்கம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.