மதுராந்தகத்தில் பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம்

71பார்த்தது
செங்கல்பட்டுதெற்கு மாவட்டம் பா. ம. க. , பொதுக்குழு கூட்டம் மதுராந்தகம் மற்றும் செய்யூர் சட்டசபை தொகுதிக்கு தலைவர், மற்றும் செயலாளர், தொகுதி மகளிர் அணி தலைவர், மற்றும் செயலாளர், பதவிகளுக்கு தேர்வு செய்வதற்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ. ஜி. குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தே. சாந்தமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ. கே. மூர்த்தி, மற்றும் வன்னியர் சங்கம் மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். வரும் சட்ட சபை தேர்தல் பணிகள் குறித்தும், புதிதாக நியமிக்கப்பட உள்ள சட்ட சபை தொகுதி தலைவர் மற்றும் செயலாளர் பெண்கள் பிரிவில் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனு அளித்தனர்.

பின்னர் 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பாமக நிர்வாகிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பி வி செந்தில், கொளத்தூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் துரைராஜ், மற்று உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி