செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட மலைப்பாளையம் மலைப்பகுதியில் ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு பொதுமக்கள் மலைப்பாதை வழியாகவும் படி வழியாகவும் ஏரி சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் இந்த ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதை வழியில் மின்விளக்கு வசதி இல்லாமல் பக்தர்கள் பொதுமக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி இந்த ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மின்வாரியத்துறை அதிகாரி மூலம் 50 புதிய கம்பங்கள் நடப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு பொதுமக்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, செயல் அலுவலர் அருள்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மின் விளக்குகளை துவக்கி வைத்தனர். 25 ஆண்டுகளாக வைத்த கோரிக்கை ஏற்ற தமிழ்நாடு அரசு மலைக்கு செல்லும் பாதையில் மின் கம்பத்துடன் கூடிய மின்விளக்குகள் பொருத்தியதற்கு அப்பகுதி மக்கள், பக்தர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.