மேல்மருவத்தூர் அரிமா சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த எல். எண்டத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலை பள்ளியில் செங்கல்பட்டு மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் அனுமதியுடன் மேல்மருவத்தூர் அரிமா சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் மாவட்டத் தலைவர் சதாசிவம், சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியை மேல்மருவத்தூர் சங்கத் தலைவர் ரஜினிகாந்த், செயலாளர் பாலாஜி, ஹரி கிருஷ்ணன். பொருளாளர் ஜெயக்குமார் ஒருங்கிணைத்தனர்
நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை நடராஜன் செய்திருந்தார்
மேலும் இந்நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் லைன் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்.