திருப்போரூரில் தீயணைப்பு துறையினர் மாதிரி ஒத்திகை

68பார்த்தது
திருப்போரூரில் தீயணைப்பு துறையினர் மாதிரி ஒத்திகை
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை இம்மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள், பாதிப்பு குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், சிறுசேரி மற்றும் காலவாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சார்பில், ஒத்திகை நிகழ்வை, நேற்று திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணன் தலைமையில், வீரர்கள் பங்கேற்று, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் குளம் மற்றும் புதுப்பாக்கம் வேண்டவராசி அம்மன் கோவில் குளத்தில் ஒத்திகை செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்கும் வழிமுறை, வெள்ளத்திலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து, செயல் விளக்கம் அளித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

மேலும், ரப்பர் படகு, நவீன இயந்திரம், ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதேபோல், மகேந்திரா சிட்டி தீயணைப்பு நிலையம் சார்பில், பரனுார் ஏரியில் ஒத்திகை நடந்தது. நிலைய போக்குவரத்து அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் செயல் முறை விளக்கம் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி