உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட,
மத்திய ஒன்றியங்களின் சார்பில்,
ராவத்தநல்லூர் கண்டிகை,
இளநகர், உள்ளிட்ட ஊராட்சிகளில்
பூத் கமிட்டி மகளிரணி இளைஞர் பாசறை நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம்
இன்று
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில்
நடைபெற்றது.
இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் கழக மகளிரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில்,
மாவட்ட செயலாளர் பேசுகையில்,
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெற்றிட, ,
சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் மக்களைச் சந்தித்து,
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத
திமுக அரசின் ஊழல்களையும்,
அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு,
மின் கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு,
வீட்டுவரி உயர்வு, கனிமவள கொள்ளை, கள்ளச்சந்தை மது விற்பனை, உள்ளிட்ட லஞ்ச-லாவண்யங்களில், ஆட்சி நடத்தும்
திமுக அரசின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, மீண்டும் அதிமுக தலைமையிலான மக்களாட்சியை தமிழகத்திற்கு கொண்டுவர ஓய்வின்றி தொகுதி மக்களைச் சந்தித்து தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வலியுறுத்தினார்.
பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பதற்கான படிவங்களை நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.