செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

83பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகாவுக்கு உட்பட்ட முகையூர் ஊராட்சியில் சுதந்திர தின தன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒரு சமுதாயத்தினர் தங்களின் சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி பேசி கிராம சபை கூட்டத்திலிருந்து வெளியேற்றினர் குறிப்பாக பெண்களை தாக்க வந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

முகையூர் காலணி பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சாலை வசதி, மின்விளக்கு மற்றும் தண்ணீர் வசதி கோரி கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிக்க வந்தனர் அப்போது அவர்கள் வைத்திருந்த மனுக்களை பிடுங்கி கிழித்து தூக்கி எறிந்தவுடன் சாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசியதாக தெரிவிக்கின்றனர் இதேபோல் ஈசிஆர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏற வர மாட்டீர்கள் உங்களையும் உங்களது பெண்களையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.

அதேபோல் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவில் தெரிவித்தனர் இந்த சம்பவத்தில் ஊராட்சி மன்ற தலைவர் எல் குமார் முன்னிலையில் அவரது நெருங்கிய நண்பரான குமரன் என்பவர் பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் சாதி பெயர் சொல்லி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி