செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் வயது 51 இவரது மனைவி சசிகலா வயது (44) இருவரும் தாம்பரத்தில் உறவினரின் நிகழ்ச்சிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்
அப்போது கூடுவாஞ்சேரி அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்தனர்
அப்போது சென்னை மார்க்கமாக பேப்பர் லோடு ஏற்றிச் சென்ற கண்டைனர் லாரி சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த சம்பத் மற்றும் சசிகலா மீது மோதியது
அப்போது கீழே விழுந்த சசிகலா மீது லாரியின் பின் சக்கர டயர் ஏறி இறகியதில் கணவன் முன்னே மனைவி சசிகலா தலை நசுங்கி உயிரிழந்தார்
பின்பு விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கருப்பசாமி வயது 20 என்பவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவத்தின் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.!