செங்கல்பட்டு,
சென்னை, மதுராந்தகம் வந்தவாசி, திருவண்ணாமலை,
செய்யாறு, எண்டத்தூர்,
மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட மினிபஸ்களும்
வந்து செல்கின்றன.
இப் பேருந்து நிலையத்தில் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இங்கு பேருந்துக்காக பயணிகள் காத்திருக்க இடவசதிகள் இருந்தும், அதிகளவிலான வழிகடைகள்
ஆக்கிரமிப்பு செய்து இருப்பதால் பயணியர் நிற்பதற்க்கு இடமின்றி அவதிப்படுகின்றனர்.
பேருந்து நிலையத்தில் பயணியர் மற்றும் பேருந்துகள் நிற்கும் இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள,
அரசுக்கு சொந்தமான இடங்களில்
வழிக்கடைகளை
அகற்றிட பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை பொது மக்கள் புகாரளித்தும் பேரூராட்சி நிர்வாகத்தினர் மெத்தனம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் துறை சார்ந்த அலுவலர்கள் உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் கள ஆய்வு செய்து வழிக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்றி , போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும், இடையூறு இன்றி பயணிக்க, துரித நடவடிக்கை எடுக்க
பயனியர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.