வியாபாரப் போட்டி கன்று குட்டியை கொலை செய்த ஆட்டு வியாபாரி.

1056பார்த்தது
வியாபாரப் போட்டி கன்று குட்டியை கொலை செய்த ஆட்டு வியாபாரி.
சூனாம்பேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கவனூர் பகுதியை சேர்ந்தவர விவசாயியான ஐயப்பன் விவசாயம் மற்றும் ஆடு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரும் ஆடு வியாபாரம் செய்து வருகிறார். இருவரும் ஒரே தொழிலில் ஈடுபட்டு வருவதால் தொழில் போட்டி காரணமாக இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் செல்வம் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவர் அவ்வப்பொழுது சண்டையிட்டுக் கொள்வதும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று செல்வம் கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் ஐயப்பன் வீட்டிற்கு சென்று அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் ஐயப்பன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இனி என்னிடம் சண்டைக்கு வந்தால் இந்த நிலை தான் எனக் கூறி, ஐயப்பன் வீட்டு அருகில் இருந்த மாட்டு கொட்டாயில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். மேலும் , கன்று குட்டியை கத்தியால் செல்வம் குத்தியதில் சம்பவ இடத்திலேயே கன்று துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இது குறித்து சூனாம்பேடு போலீசில் ஐயப்பன் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகின்றனர். கன்று குட்டியை குத்தி க்கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி